மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டது இராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசை படகுகள் உடன் 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்பொழுது கச்சதீவு - நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் பொழுது இலங்கை கடற்படை மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர். மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து […]

தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டது இராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசை படகுகள் உடன் 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்பொழுது கச்சதீவு - நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் பொழுது இலங்கை கடற்படை மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர். மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்த மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் நீதிபதி ஜூலை 5ஆம் தேதி வரை மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu