இந்தியாவின் பிரபல பைக் டாக்ஸி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ராபிடோ, வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து 120 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியை உதவியாக பெற்றுள்ளது. இதன் மூலம், ராபிடோ நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்புடைய யூனிகார்ன் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் ராபிடோ செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ராபிடோ நிறுவனத்தின் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.