140 ஆண்டுகள் கழித்து, அழிந்ததாக கருதப்பட்ட புறா இனம் கண்டுபிடிப்பு

November 25, 2022

பப்புவா கினியா தீவில், 140 ஆண்டுகள் கழித்து, அழிந்ததாக கருதப்பட்ட புறா இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் அழிந்ததாக கருதப்பட்டது. இது black-naped pheasant pigeon என்ற பெயரால் அறியப்படுகிறது. இந்நிலையில், ‘லாஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பின் உதவியுடன் இந்த பறவை இனத்தை, பெர்குசன் தீவு பகுதியில், விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பறவை தேடலுக்காக அமைக்கப்பட்ட கேமராக்களின் மூலம், கடந்த செப்டம்பர் மாதம் இந்த பறவையின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. […]

பப்புவா கினியா தீவில், 140 ஆண்டுகள் கழித்து, அழிந்ததாக கருதப்பட்ட புறா இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் அழிந்ததாக கருதப்பட்டது. இது black-naped pheasant pigeon என்ற பெயரால் அறியப்படுகிறது. இந்நிலையில், ‘லாஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பின் உதவியுடன் இந்த பறவை இனத்தை, பெர்குசன் தீவு பகுதியில், விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பறவை தேடலுக்காக அமைக்கப்பட்ட கேமராக்களின் மூலம், கடந்த செப்டம்பர் மாதம் இந்த பறவையின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், அழிந்ததாக கருதப்படும் வேறு சில பறவை இனங்களும் கண்டறியப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu