ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்படுகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு செயலாளர் தீப்தி உமாசங்கர் கூறுகையில், ரா அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவி காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்படுவதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு வழங்கி உள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். சின்ஹா 2 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பதவியில் தொடருவார் என அறிவித்துள்ளார்.