கிப்ட் சிட்டியில் வெளிநாட்டு நாணய கணக்குகளை தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி

July 11, 2024

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக நகரமான கிப்ட் சிட்டியில், வெளிநாட்டு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கணக்குகளை தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் தங்கி உள்ள நபர்கள் கிப்ட் சிட்டியில் டாலர்கள் போன்ற வெளிநாட்டு நாணயங்களில் வைப்புத்தொகை கணக்கு திறந்து கொள்ளலாம். இது வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வரும் இந்தியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மூலம், கிஃப்ட் […]

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக நகரமான கிப்ட் சிட்டியில், வெளிநாட்டு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கணக்குகளை தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் தங்கி உள்ள நபர்கள் கிப்ட் சிட்டியில் டாலர்கள் போன்ற வெளிநாட்டு நாணயங்களில் வைப்புத்தொகை கணக்கு திறந்து கொள்ளலாம். இது வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வரும் இந்தியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மூலம், கிஃப்ட் சிட்டியின் பயன்பாடு அதிகரிக்கும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் தபான் ரே தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu