சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து - மத்திய ரிசர்வ் வங்கி

October 11, 2022

பூனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு போதுமான பணம் வங்கியிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன், வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதிக்கு பின்னர் இந்த வங்கி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் தரவுகளின் படி, வங்கியில் […]

பூனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு போதுமான பணம் வங்கியிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன், வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதிக்கு பின்னர் இந்த வங்கி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் தரவுகளின் படி, வங்கியில் பணம் செலுத்தி உள்ள 99 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பணம் முழுமையாக திருப்பி செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) மூலம் பணம் திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி வரை, DICGC, 152.36 கோடி ரூபாய் பணத்தை இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. DICGC மூலம், வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது.

வங்கியின் சேவைகளை தொடர்வதற்கு தேவையான நிதி வங்கியிடம் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் மகாராஷ்டிரா மாநிலத்தின் கூட்டுறவு சங்கங்களின் ஆணையர் இந்த வங்கியின் செயல்பாடுகளை நிறுத்த, மத்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்படி, வங்கியின் உரிமத்தை தற்போது மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu