பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி உரிமம் ரத்து - மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை

June 18, 2024

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பூர்வாஞ்சல் வங்கியிடம் போதுமான அளவு மூலதனத் தொகை இல்லாததும், வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாததும் இதற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி அனைத்து விதமான வங்கி செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பூர்வாஞ்சல் வங்கி சமர்ப்பித்துள்ள தரவுகள் அடிப்படையில், அந்த வங்கியில் வைப்பு வைத்துள்ள 99.51% வாடிக்கையாளர்கள் தங்கள் தொகையை டி […]

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பூர்வாஞ்சல் வங்கியிடம் போதுமான அளவு மூலதனத் தொகை இல்லாததும், வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாததும் இதற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி அனைத்து விதமான வங்கி செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பூர்வாஞ்சல் வங்கி சமர்ப்பித்துள்ள தரவுகள் அடிப்படையில், அந்த வங்கியில் வைப்பு வைத்துள்ள 99.51% வாடிக்கையாளர்கள் தங்கள் தொகையை டி ஐ சி ஜி மூலம் பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களின் முழுமையான பணத்தை செலுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu