ஹெச்டிஎஃப்சி நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் - மத்திய ரிசர்வ் வங்கி

March 18, 2023

விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஹெச்டிஎஃப்சி வீடமைப்பு நிதி நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி இந்த அபராதத்தை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. வீட்டுக் கடன் வழங்கும் எச்டிஎப்சி நிறுவனத்தின் நிதி நிலை குறித்து தேசிய வீடமைப்பு வங்கி - NHB ஆய்வு செய்ததில், விதிமுறைகளை மீறியது தெரியவந்துள்ளது. எனவே, இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு நிறுவனம் அளித்த பதில்களை ஆய்வு செய்த பின்னர், […]

விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஹெச்டிஎஃப்சி வீடமைப்பு நிதி நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி இந்த அபராதத்தை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

வீட்டுக் கடன் வழங்கும் எச்டிஎப்சி நிறுவனத்தின் நிதி நிலை குறித்து தேசிய வீடமைப்பு வங்கி - NHB ஆய்வு செய்ததில், விதிமுறைகளை மீறியது தெரியவந்துள்ளது. எனவே, இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு நிறுவனம் அளித்த பதில்களை ஆய்வு செய்த பின்னர், அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த அபராதத்தால், ஹெச்டிஎஃப்சி நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu