பேடிஎம் விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி மறைமுகமாக ஆராய்ந்து வருகிறது. அதன் பயனாக, தற்போது, ஐ ஐ எஃப் எல் பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்க நகை கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ ஐ எஃப் எல் பைனான்ஸ் நிறுவனத்தின் தங்க நகை கடன் வழங்கல் துறையில் குறிப்பிடத்தக்க மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தங்க நகையின் தூய்மை மற்றும் எடையை மதிப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தங்க கடனுக்கான ஏல முறைகள் மற்றும் அபராதத் தொகை விதிப்பு வழிமுறைகள் ஆகியவற்றையும் நிதி நிறுவனம் மீறி உள்ளதாக கூறப்படுகிறது. வெளிப்படை தன்மை இல்லாமல், பண விநியோகத்திலும் சட்ட வரம்புகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.