குஜராத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ரெட் அலர்ட்

August 27, 2024

குஜராத்தில் திடீர் வெள்ள பெருக்கு காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்யக்கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நக்த்ரானா-லக்பத் நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கி காணப்படுகிறது. மோர்பி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர் டிராலியில் 7 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மாநில முதல்வர் பூபேந்திர பாட்டீல் தாழ்வான பகுதிகளில் உள்ள […]

குஜராத்தில் திடீர் வெள்ள பெருக்கு காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்யக்கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நக்த்ரானா-லக்பத் நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கி காணப்படுகிறது. மோர்பி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர் டிராலியில் 7 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மாநில முதல்வர் பூபேந்திர பாட்டீல் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத்தில் இன்னும் சில நாட்கள் கனமழை தொடரும் என ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu