வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஐந்து நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
நாட்டில் வட மாநிலங்களில் தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வட இந்திய மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் மேற்கு உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11:00 மணி முதல் 4 மணி வரை கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது