கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

கேரளாவில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 160 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி வயநாடு, மலப்புரம், இடுக்கி,திரிசூர்,பாலக்காடு, கோழிக்கோடு,கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன. மேலும் அங்கு கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெற […]

கேரளாவில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 160 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி வயநாடு, மலப்புரம், இடுக்கி,திரிசூர்,பாலக்காடு, கோழிக்கோடு,கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன. மேலும் அங்கு கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu