748 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ரெட்டிட் ஐபிஓ அறிவிப்பு

March 11, 2024

ரெட்டிட் நிறுவனம் நிகழாண்டில் ஐபிஓ வெளியிட உள்ளது. இதன் மதிப்பு 748 மில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ரெட்டிட் ஐ பி ஓ வை, மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ், ஜே பி மோர்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளன. நிகழாண்டில் வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓ வில் ஒன்றாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டிட் சமூக ஊடக தளம் கிட்டத்தட்ட 22 மில்லியன் பங்குகளை ஐ பி […]

ரெட்டிட் நிறுவனம் நிகழாண்டில் ஐபிஓ வெளியிட உள்ளது. இதன் மதிப்பு 748 மில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ரெட்டிட் ஐ பி ஓ வை, மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ், ஜே பி மோர்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளன. நிகழாண்டில் வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓ வில் ஒன்றாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டிட் சமூக ஊடக தளம் கிட்டத்தட்ட 22 மில்லியன் பங்குகளை ஐ பி ஓ மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கு 31 முதல் 34 டாலர்கள் அளவுக்கு விற்கப்படலாம் என ப்ளூம்பர்க் தெரிவித்துள்ளது. அதிலும், ஜனவரி 1ம் தேதிக்கு முன்னதாக ரெட்டிட் சமூக ஊடகத்தை பயன்படுத்தி வரும் பயனர்கள் மற்றும் முகவர்களுக்கு, தனியாக 1.76 மில்லியன் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மதிப்பு 6.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu