பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி 50 சதவீதம் குறைக்க முடிவு

பஞ்சு விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளி உற்பத்தியை 50 சதவிகிதம் குறைக்க முடிவு எடுத்துள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக ஜவுளி தொழில் உள்ளது. ஏற்கனவே இங்கு ஆள் பற்றாக்குறை, உரிய விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் ஜவுளி தொழில் நலிவடைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் கிலோ ஒன்று 15 முதல் 25 வரை விலை ஏறியது. மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கான […]

பஞ்சு விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளி உற்பத்தியை 50 சதவிகிதம் குறைக்க முடிவு எடுத்துள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக ஜவுளி தொழில் உள்ளது. ஏற்கனவே இங்கு ஆள் பற்றாக்குறை, உரிய விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் ஜவுளி தொழில் நலிவடைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் கிலோ ஒன்று 15 முதல் 25 வரை விலை ஏறியது. மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கான தொழில்நுட்பம் அமலுக்கு கொண்டுவந்துவதால் வியாபாரிகள் ஜவுளி வாங்குவதை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கபட்டு வருகின்றனர். தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர வேறு வழியில்லை என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50% வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu