சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ பெயரில் மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்

November 24, 2022

சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் கூறுகையில், இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா' என்ற முழக்கத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ‘வியத்தகு இந்தியா’ என்ற பிரச்சாரம் […]

சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் கூறுகையில், இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா' என்ற முழக்கத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ‘வியத்தகு இந்தியா’ என்ற பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். 2019 காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.7 கோடியாக இருந்தது . 2023-ல் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகாரிக்கும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu