ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் முகேஷ் அம்பானி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் முதல் 30 மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இணைய உள்ளது என்று தெரிவித்தார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த 2 தசாப்தங்களில், உலக அளவில் முதல் 500 என்ற இடத்தில் இருந்து முதல் 50 என்ற இடத்துக்கு முன்னேறி உள்ளது என்று கூறினார். அத்துடன், உலக அரங்கில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.
ரிலையன்ஸ் பொதுக் கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்: ஏஐ, IoT, இயந்திர கற்றல் மற்றும் ரோபாட்டிக்ஸால் ஆதரிக்கப்படும் உற்பத்தி சுற்றுச்சூழலை நிறுவுவதற்கு ரூ. 75,000 கோடி வரை முதலீடு செய்யப்படும். ஜாம்நகர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆற்றல் வணிக எதிர்கால மையமாக இருக்கும்.