ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் தொடங்க அமெரிக்காவிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையைத் தளர்த்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், கடந்த 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா, வெனிசுலாவில் இருந்து நேரடி எண்ணெய் கொள்முதல் செய்ய உள்ளது.
வெனிசுலாவின் அரசு எண்ணெய் நிறுவனமான PDVSA உடன் நேரடி எண்ணெய் விற்பனை மற்றும் எரிபொருள் இறக்குமதி பற்றிய விவாதங்களில் ரிலையன்ஸ் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக எரிசக்தி சந்தை மாற்றங்களுக்கு மத்தியில், குறைந்த செலவில் நிலையான கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியை உருவாக்க இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா மீதான இந்தியாவின் எண்ணெய் சார்பை குறைக்கவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.