ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு 18 லட்சம் கோடி

January 12, 2024

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 18 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில் இந்த நிலவரம் எட்டப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வரலாற்றில் இது புதிய உச்சம் ஆகும். இதன் மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து, 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட எலைட் பிரிவுக்குள் அவர் நுழைந்துள்ளார். நேற்று முன்தினம், குஜராத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில், பசுமை எரிசக்தி குறித்த திட்ட அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவித்தார். அதை […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 18 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில் இந்த நிலவரம் எட்டப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வரலாற்றில் இது புதிய உச்சம் ஆகும். இதன் மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து, 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட எலைட் பிரிவுக்குள் அவர் நுழைந்துள்ளார்.

நேற்று முன்தினம், குஜராத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில், பசுமை எரிசக்தி குறித்த திட்ட அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவித்தார். அதை தொடர்ந்து, நேற்று 2.58% அளவில் ரிலையன்ஸ் பங்குகள் உயர்ந்தன. இதன் விளைவாக, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சொத்து மதிப்பு 12% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu