ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 10% பங்குகளை விற்க முடிவு

August 25, 2023

ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம், கடனை திருப்பி செலுத்துதல் மற்றும் பொது பட்டியலில் இடம்பெறுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதன் 8 - 10% பங்குகள் விற்கப்பட உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகள் விற்கப்பட உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், கூடுதலாக 10% பங்குகள் விற்கப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 15 […]

ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம், கடனை திருப்பி செலுத்துதல் மற்றும் பொது பட்டியலில் இடம்பெறுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதன் 8 - 10% பங்குகள் விற்கப்பட உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகள் விற்கப்பட உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், கூடுதலாக 10% பங்குகள் விற்கப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 15 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், ஐ பி ஓ வுக்கு வெளிவர இது மிகவும் துணை புரியும் என கருதப்படுகிறது. முன்னதாக, இரு தினங்கள் முன்பு, கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 1% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu