குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். மேலும் இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
தற்போது உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தியாவை வந்தடையும் தமிழர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.