வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் கிட்டத்தட்ட 3.7% அளவுக்கு உயரும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் 124 பில்லியன் டாலர்கள் மதிப்பிலும், வரும் 2025 ஆம் ஆண்டு 129 பில்லியன் டாலர்கள் அளவிலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இருந்து தான் அதிக பணம் கிடைக்கிறது. மேலும், உலக வங்கி அறிக்கையின் படி, வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் தொகையை பொறுத்தவரை, இந்திய மக்களுக்கு அனுப்பப்படும் தொகை தான் உலக அளவில் அதிகம். இந்த நிலையில், யுபிஐ சேவைகள் சிங்கப்பூர் மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதால், இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகையின் அளவு மேலும் உயரும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.