தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ் பிரிட்டோ மாகாணங்களை புயல் தாக்கியுள்ளது. பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. புயலால் இங்கு உள்ள மலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் ஓடியதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த புயல் மழைக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. மோப்ப நாய்கள் கொண்டு இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருப்பவர்களை தேடி வருகின்றன இந்த புயலில் விமோசா டோவல் பகுதியில் பலர் இறந்ததாக கூறப்படுகிறது. தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளை சந்தித்ததைத் தொடர்ந்து இந்த வெள்ளம் ஏற்பட்டது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.