ஹிந்து வெறுப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்காவில் தீர்மானம்

April 13, 2024

ஹிந்து வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்து வெறுப்பு நடவடிக்கைகள் இந்து கோயில்கள் மீதான தாக்குதல் போன்றவை அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியா அமெரிக்க எம்.பி தானேதர் இந்த தீர்மானத்தை புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வசித்து வருகின்றனர். இந்துக்கள் அமெரிக்க […]

ஹிந்து வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்து வெறுப்பு நடவடிக்கைகள் இந்து கோயில்கள் மீதான தாக்குதல் போன்றவை அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியா அமெரிக்க எம்.பி தானேதர் இந்த தீர்மானத்தை புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வசித்து வருகின்றனர். இந்துக்கள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான பங்கு வழங்கியுள்ளனர். இருந்தபோதும் தொடர்ந்து வெறுப்புணர்வு மற்றும் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுடைய பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு குறியீடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் அவர்கள் மீது வெறுப்பு பேச்சுகள் மற்றும் இனவாத குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது ஆண்டுகு ஆண்டு அதிகரித்து வருகிறது. இனவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து விளக்கம் கேட்டு இந்திய - அமெரிக்க எம்.பிக்கள் நீதித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu