மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பல மாநிலங்களும் இதே திட்டத்தை அறிமுகப்படுத்தினுள்ளன. 2023 நவம்பரில் மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகமாகி, 24 லட்சம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி செலவிடப்பட்டு வந்தது.
எதிர்ப்புகளை தொடர்ந்து, 40% பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில், சில பள்ளிகளில் முட்டை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும், அக்சய பாத்ரா என்.ஜி.ஓ மூலம் வழங்கப்படும் பள்ளிகளிலும் முட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளுக்கான மதிய உணவின் நிதியை நிறுத்தி, முட்டை மற்றும் சர்க்கரை வழங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதேபோல், மத்தியப்பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களிலும் இந்த திட்டம் கைவிடப்பட்டது.