பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல ஜூன் நான்காம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழக தேர்தல் நடைமுறை ஜூன் நான்காம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் வாக்குப்பதிவு முடிந்த பின்னும் வாகன சோதனை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உரிய ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் நான்காம் தேதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் ரூபாய் 280 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டவை ஆகும். கைப்பற்றப்பட்ட பணங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இவை யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்ற விவரங்களும் தேர்தல் ஆணையங்களுக்கு தெரிவிக்கப்படும்.