ராஜஸ்தானில் பள்ளி மத கலவரம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவனை, சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுவேளையின்போது ஏற்பட்ட சண்டையில், ஒருவன் மற்றவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், மாணவனை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களையும், அவரது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபன் பகுதியில் மோதல்கள் வெடித்து, ஆந்தலையும் தீவைத்தும், கல் வீசும் தாக்குதல்களும் நடந்தன. உதய்பூரில் மத கலவரத்தைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையசேவை தடை செய்யப்பட்டுள்ளது.