செயற்கைக்கோள் ஏவுதலை கடைசி வினாடியில் நிறுத்திய ராக்கெட் லேப்

September 19, 2024

செப்டம்பர் 18 அன்று, பிரெஞ்சு நிறுவனமான Kinéis க்காக ஐந்து "இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்" செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட் லேப் திட்டமிட்டிருந்தது. நியூசிலாந்தில் ஏவுதல் பணிகள் நடந்த நிலையில், கடைசி நொடியில் நிகழ்வு நிறுத்தப்பட்டது. எலக்ட்ரான் ராக்கெட்டின் என்ஜின்கள் இயங்கத் தொடங்கினாலும், உடனடியாக நிறுத்தப்பட்டதால், ஏவுதல் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ராக்கெட் லேப் நிறுவனம், இந்த தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அடுத்த 14 நாட்களுக்குள் மீண்டும் ஏவுவதற்கான வாய்ப்பை பரிசீலித்து வருகிறது. Kinéis நிறுவனத்திற்காக இது ராக்கெட் […]

செப்டம்பர் 18 அன்று, பிரெஞ்சு நிறுவனமான Kinéis க்காக ஐந்து "இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்" செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட் லேப் திட்டமிட்டிருந்தது. நியூசிலாந்தில் ஏவுதல் பணிகள் நடந்த நிலையில், கடைசி நொடியில் நிகழ்வு நிறுத்தப்பட்டது. எலக்ட்ரான் ராக்கெட்டின் என்ஜின்கள் இயங்கத் தொடங்கினாலும், உடனடியாக நிறுத்தப்பட்டதால், ஏவுதல் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
ராக்கெட் லேப் நிறுவனம், இந்த தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அடுத்த 14 நாட்களுக்குள் மீண்டும் ஏவுவதற்கான வாய்ப்பை பரிசீலித்து வருகிறது. Kinéis நிறுவனத்திற்காக இது ராக்கெட் லேப்பின் இரண்டாவது ஏவுதல் முயற்சியாகும். ராக்கெட் லேப், இதுவரை 52 வெற்றிகரமான சுற்றுப்பாதை பயணங்களை நிறைவேற்றியுள்ளது. இதில் 2024 ஆம் ஆண்டு மட்டும் 10 ஏவுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu