மூத்த குடிமக்கள் சலுகை ரத்தானதால் ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய்

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் ரயில்வேக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு, 40 - 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மூத்த குடிமக்களாக இருந்தாலும் முழுமையான கட்டணம் செலுத்தித் தான் ரயில்களில் பயணிக்க வேண்டும். இந்நிலையில், இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அளித்துள்ள […]

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் ரயில்வேக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு, 40 - 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மூத்த குடிமக்களாக இருந்தாலும் முழுமையான கட்டணம் செலுத்தித் தான் ரயில்களில் பயணிக்க வேண்டும். இந்நிலையில், இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அளித்துள்ள பதிலில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், 2022 - 23ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு, 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த காலத்தில் எட்டு கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணித்துள்ளனர். இவர்களுக்கான பயண கட்டணம் வாயிலாக, ரயில்வேக்கு மொத்தமாக, 5,062 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu