டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 மாத உச்சம்

March 7, 2024

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதால், ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அந்த வகையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.1% உயர்ந்து, 82.725 ஆக உள்ளது. இது கடந்த செப்டம்பர் 4ம் தேதிக்கு பிறகு பதிவாகும் அதிகபட்ச மதிப்பாகும். […]

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதால், ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அந்த வகையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.1% உயர்ந்து, 82.725 ஆக உள்ளது. இது கடந்த செப்டம்பர் 4ம் தேதிக்கு பிறகு பதிவாகும் அதிகபட்ச மதிப்பாகும். அத்துடன், 2024 ஆம் ஆண்டில், இந்திய ரூபாய் 0.5% உயர்வை பதிவு செய்துள்ளது. இந்தியாவுடன் மற்ற ஆசிய நாட்டு நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மிகப்பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. நிகழாண்டில் இந்தியாவில் பதிவாகியுள்ள அந்நிய முதலீடுகள் 5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்ததே இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu