பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை

September 23, 2023

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலக அளவில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தது. இதனால் ரஷ்யாவில் விலைவாசி ஏற்றம், பண வீக்கம் அதிகரித்து மக்கள் பொருளாதார துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். தற்போது ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. […]

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலக அளவில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தது. இதனால் ரஷ்யாவில் விலைவாசி ஏற்றம், பண வீக்கம் அதிகரித்து மக்கள் பொருளாதார துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். தற்போது ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனை அடுத்து உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சம் பேரல்கள் என்ற அளவில் ரஷ்யா டீசலை ஏற்றுமதி செய்கிறது. சுமார் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ரஷ்யா இந்த ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் எரிபொருள் விலை நான்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக சந்தையில் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். யுரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக குழுவில் உள்ள பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், அர்மேனியா நாடுகளுக்கு இந்த தடை கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu