2028 வரை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா நீடிக்கும் - நாசா அறிவிப்பு

April 29, 2023

சர்வதேச விண்வெளி நிலையத்தில், அமெரிக்கா, ஜப்பான், கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் உறுப்பு நாடுகள் போன்றவை பங்களித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா தவிர இதர நாடுகளின் பங்களிப்புகள் 2030 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், 2028 ஆம் ஆண்டு வரையில், ரஷ்யா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பங்கெடுக்கும் என தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், 2030 […]

சர்வதேச விண்வெளி நிலையத்தில், அமெரிக்கா, ஜப்பான், கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் உறுப்பு நாடுகள் போன்றவை பங்களித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா தவிர இதர நாடுகளின் பங்களிப்புகள் 2030 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், 2028 ஆம் ஆண்டு வரையில், ரஷ்யா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பங்கெடுக்கும் என தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள், தனக்கான தனி விண்வெளி நிலையத்தை அமைப்பதில் ரஷ்யா ஈடுபட திட்டமிட்டுள்ளது. எனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா கூறியிருந்தது. 2024 ஆம் ஆண்டுடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற உள்ளதாக ரஷ்யா எச்சரித்திருந்த நிலையில், இந்த காலக்கெடு 2028 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu