ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ரஷ்யாவில் வரும் மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடத்த அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த தேர்தலில் புடின் போட்டிடுவாரா என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. அடுத்த ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் மேலும் இரண்டு முறை அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் சாசன திருத்தம் செய்யப்பட்டு விட்டது. எனவே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் போட்டியிடும் பட்சத்தில் அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறப்படுகிறது. அரசியல் சாசன திருத்தத்தின்படி வரும் 2036 ஆம் ஆண்டு வரை புடின் ரஷ்ய அதிபராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.