ரஷ்ய இராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் முதலில் உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர். பின்னர் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று தகவல் வந்தது. ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக ஏஜென்ட்கள் இந்திய இளைஞர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர்த்தனர். இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 8 இந்திய இளைஞர்கள் பலியாகியதையடுத்து இந்தியர்களை போரில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக்கொண்டார். இதனை ரஷ்யா ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய படையில் இந்தியர்களை சேர்ப்பது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டது. அதே சமயத்தில் உரிய இழப்பீட்டுத் தொகை முழு அளவில் நிறைவேற்றப்படும் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.