அணுமின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - ரஷ்யா

April 9, 2024

உக்ரைனின் சப்போரிஷியா பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தின் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் உள்ளது. அதன் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இது குறித்து ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்த நிலைய இயக்குனர் கூறியுள்ளதாவது, மின் நிலையத்தின் மீது மோதி வெடிக்கக்கூடிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ஏவுகணையை ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணை இடைமறித்து அழித்தது. இதுபோன்று அணுமின் […]

உக்ரைனின் சப்போரிஷியா பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தின் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் உள்ளது. அதன் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இது குறித்து ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்த நிலைய இயக்குனர் கூறியுள்ளதாவது, மின் நிலையத்தின் மீது மோதி வெடிக்கக்கூடிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ஏவுகணையை ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணை இடைமறித்து அழித்தது. இதுபோன்று அணுமின் நிலையத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் அபாயகரமானது ஆகும் என்றார். எனினும் இந்த தாக்குதலை உக்ரைன் மறுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் உளவு பிரிவு செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரி கூறுகையில், சப்போரிஷியா மின் நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுவது பொய்யானது. ரஷ்யா இது போன்று அடிக்கடி கற்பனையாக கூறி வருகிறது. எனினும் இந்த தாக்குதலை ஐநாவின் சர்வதேச அனுசக்தி கண்காணிப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ட்ரோன் தாக்குதலால் ஆபத்தான கட்டுமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்தும் கூறப்படவில்லை.

சப்போரிஷியா பகுதியை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும். இல்லையென்றால் அங்கு மாபெரும் அணுசக்தி பேரழிவு ஏற்படும் என்று ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ எச்சரித்துள்ளார். சர்வதேச அணுசக்தி அமைப்பின் நிபுணர் குழு மின் நிலையத்திலேயே நிரந்தரமாக தங்கி கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu