ரஷ்ய கடற்படை, ஜப்பான் கடல் பகுதியில், சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. தற்போது, இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. பசிபிக் கடலில், கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தொலைவில், பொய்யான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதனை ஏவுகணை துல்லியமாக தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
ரஷ்யா, இது குறித்து பெருமையாக அறிவித்துள்ள அதே வேளையில், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோசிமாச ஹயாஷி, “ரஷ்ய ஏவுகணை சோதனையால் இதுவரை எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. ஆனால், ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் விழிப்புடன் உள்ளோம். பெலாரஸ் மற்றும் ரஷ்யா இணைந்து அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.