ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளன. இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ரஷியா இந்தியா மற்றும் பிரேசிலின் கோரிக்கைகளை ஆதரித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய தெற்கின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. மேலும், இங்கிலாந்து இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.