உக்ரைன் மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்

March 23, 2024

உக்ரைனின் நீர் மின் நிலையம் உட்பட மின்சார கட்டமைப்பின் மீது ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து கூறப்படுவதாவது நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட மின் கட்டமைப்பு பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டுள்ளது. […]

உக்ரைனின் நீர் மின் நிலையம் உட்பட மின்சார கட்டமைப்பின் மீது ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து கூறப்படுவதாவது நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட மின் கட்டமைப்பு பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கூட எரிசக்தி மையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இது கடந்த ஆண்டு விட மிக தீவிரமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 60 ட்ரான்களையும் 90 ஏவுகணைகளையும் வீசி உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். அது மட்டுமின்றி இது போன்ற வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் நீக்ரோ நதியின் குறுக்கே சபரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய நீர் தேக்க மின் உற்பத்தி நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் நீக்ரோ மின் தேக்க மின் நிலையத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கும் முக்கிய கம்பி இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் கிராசி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu