ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு, உக்ரைனில் இருந்து 158 ஆளில்லா விமானங்களை ஒரே இரவில் தாக்கியது. இவை அனைத்தையும் ரஷ்ய படை இடைமறித்து அழித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கிய பிறகு, உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷியாவின் கூர்ஸ்க், பிரயான்ஸ்க், வோரோனேஜ், பெல்கோரோட் பகுதிகளில் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில், உக்ரைனில் ரஷியாவின் 11 ட்ரோன்களில் 8 சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.