உக்ரைன் ரஷ்யா போர் - சமாதான முயற்சியில் போப் பிரான்சிஸ் - ரஷ்யா வரவேற்பு

May 27, 2023

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு, இத்தாலிய ஆயர்கள் மாநாட்டுத் தலைவர் கார்டினல் மேட்டியோ சூப்பிக்கு போப் பிரான்சிஸ் கோரிக்கை வைத்துள்ளார். இவரது சமாதான முன்னெடுப்புக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: “போர் பதற்றத்தை தணிக்கவும், அமைதிப் பாதைக்கு பங்களிக்கும் விதமாகவும், போப் பிரான்சிஸ் சமாதான நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அவரது மனப்பூர்வமான விருப்பத்தை […]

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு, இத்தாலிய ஆயர்கள் மாநாட்டுத் தலைவர் கார்டினல் மேட்டியோ சூப்பிக்கு போப் பிரான்சிஸ் கோரிக்கை வைத்துள்ளார். இவரது சமாதான முன்னெடுப்புக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: “போர் பதற்றத்தை தணிக்கவும், அமைதிப் பாதைக்கு பங்களிக்கும் விதமாகவும், போப் பிரான்சிஸ் சமாதான நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அவரது மனப்பூர்வமான விருப்பத்தை ரஷ்யா அங்கீகரிக்கிறது. அதே வேளையில், வாட்டிக்கன் தரப்பில் மாஸ்கோ பயணம் குறித்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu