எப்போதுமே, நிலவின் ஒரு பகுதி பூமியின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பகுதியின் புகைப்படத்தை ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் அனுப்பியுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக, லூனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. வரும் 21ஆம் தேதி, இது நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெற உள்ளது. இந்த நிலையில், தென் துருவப் பகுதியில் காணப்படும் சீமேன் கிரேட்டர் பகுதியின் புகைப்படத்தை லூனா 25 எடுத்து அனுப்பியுள்ளது. முன்னதாக, கடந்த 1959 அக்டோபர் மாதத்தில், ரஷ்யாவின் லூனா 3, நிலவின் மறுபக்கத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது. தற்போது, இரண்டாம் முறையாக, ரஷ்யாவின் லூனா 25 புகைப்படம் அனுப்பி உள்ளது. இதன் மூலம், ரஷ்யாவின் நிலவு பாரம்பரியம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லூனா 25 அனுப்பியுள்ள புகைப்படத்தின் மூலம், நிலவின் தென்துருவம் குறித்த ஆராய்ச்சிகள் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.