ஜி 20 மாநாட்டில் புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு

August 29, 2023

வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில், புது டெல்லியில் வைத்து ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா சார்பில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக இவர் பங்கேற்க உள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ரஷ்ய அதிபர் புதின் மீது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் […]

வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில், புது டெல்லியில் வைத்து ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா சார்பில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக இவர் பங்கேற்க உள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ரஷ்ய அதிபர் புதின் மீது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. அதன் பெயரில் அவர் கைது செய்யப்படலாம் என கருதப்படுவதால், அவர் மாநாடுகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை. தற்போது, ஜி 20 மாநாட்டிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அவர், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க முடியாததை குறித்து தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu