ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் ஏவும் நிகழ்வு கடைசி நிமிடத்தில் ரத்து

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை சுமந்து செல்வதற்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் தயார் நிலையில் இருந்தது. ஆனால், இந்த கலத்தை ஏவும் பணிகள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் நேற்று ஏவப்பட இருந்தது. இந்த கலத்தில், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட இருந்தனர். ராக்கெட் ஏவப்படுவதற்கு 20 நொடிகளுக்கு முன்பாக திட்டம் ரத்து செய்யப்பட்டது. விண்கலமும் […]

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை சுமந்து செல்வதற்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் தயார் நிலையில் இருந்தது. ஆனால், இந்த கலத்தை ஏவும் பணிகள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் நேற்று ஏவப்பட இருந்தது. இந்த கலத்தில், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட இருந்தனர். ராக்கெட் ஏவப்படுவதற்கு 20 நொடிகளுக்கு முன்பாக திட்டம் ரத்து செய்யப்பட்டது. விண்கலமும் விண்கலத்தில் இருந்த வீரர்களும் பாதுகாப்பாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த வீரர்களை வரும் சனிக்கிழமை மீண்டும் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கடைசி நிமிடத்தில் சோயுஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu