மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் - ரஷ்யா

March 28, 2024

மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்டிகோவ் கூறியுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 139 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இருந்தபோதிலும் இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அதனை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, […]

மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்டிகோவ் கூறியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 139 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இருந்தபோதிலும் இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அதனை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்டிகோவ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாடுகள் உள்ளன. எங்களிடம் கிடைக்கப்பெற்ற உண்மை தகவலின் அடிப்படையில் இதை கூறுகின்றோம். இந்த நாடுகள் முன்பே கடந்த காலங்களில் ரஷ்யா மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. உக்ரைனுடன் சேர்ந்து மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்புகின்றன என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu