நிலவில் மோதியது ரஷியாவின் லூனா- 25 விண்கலம்

August 21, 2023

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை கடந்த பத்தாம் தேதி விண்ணில் செலுத்தியது. அது நிலவின் தென் துருவத்தில் சென்று ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது. லூனா 25 விண்கலம் 21 ஆம் தேதி தரையிறங்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கூறி இருந்தனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. இதனை […]

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை கடந்த பத்தாம் தேதி விண்ணில் செலுத்தியது. அது நிலவின் தென் துருவத்தில் சென்று ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது. லூனா 25 விண்கலம் 21 ஆம் தேதி தரையிறங்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கூறி இருந்தனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. இதனை அடுத்து அதன் சுற்றுப் பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்ட பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைக்க முடியாமல் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு அந்த விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu