சபர்மதி ஆக்ரா விரைவு ரயில் விபத்து

March 18, 2024

ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி - ஆக்ரா விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி - ஆக்ரா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் தடம் புரண்டது. இதில் ரயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. மேலும் ரயில் தடம் […]

ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி - ஆக்ரா விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி - ஆக்ரா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் தடம் புரண்டது. இதில் ரயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. மேலும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என வட மேற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி நோக்கி செல்லும், டெல்லியில் இருந்து வரும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் நோக்கி செல்லும் பாதை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்தினால் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu