சி.பி.ஐ. விசாரணையில் சந்தீப் கோஷ் மீது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ சங்கம் சந்தீப் கோஷை சஸ்பெண்ட் செய்தது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் குற்றவாளியான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்க கோரி பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கிடையில், பெண் டாக்டரை கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள், சந்தீப் கோஷ் வீடு உட்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். இதனால், இந்திய மருத்துவ சங்கம் சந்தீப் கோஷ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கிவிட உள்ளது