2025 ல் சனி கோளின் வளையங்கள் மறையும் - அறிவியல் தகவல்

September 3, 2024

சூரிய குடும்பத்தின் ஆறாவது கோள் சனி ஆகும். இது அதன் அழகிய வளையங்களுக்காக புகழ்பெற்றது. இந்த வளையங்கள் பனிக்கட்டிகள் மற்றும் பாறை துண்டுகளால் ஆனவை. மேலும், இந்த வளையங்கள் A, B, C போன்ற பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை சனி கோளின் நிலவுகளின் ஈர்ப்பு விசைகளால் வடிவமைக்கப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கோளின் அச்சு சாய்வின் காரணமாக, பூமியிலிருந்து பார்க்கும்போது அதன் வளையங்கள் மறைய உள்ளன. அதாவது, உண்மையில் அதன் வளையங்கள் மறையவில்லை; இங்கிருந்து பார்க்கும்போது நம் […]

சூரிய குடும்பத்தின் ஆறாவது கோள் சனி ஆகும். இது அதன் அழகிய வளையங்களுக்காக புகழ்பெற்றது. இந்த வளையங்கள் பனிக்கட்டிகள் மற்றும் பாறை துண்டுகளால் ஆனவை. மேலும், இந்த வளையங்கள் A, B, C போன்ற பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை சனி கோளின் நிலவுகளின் ஈர்ப்பு விசைகளால் வடிவமைக்கப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கோளின் அச்சு சாய்வின் காரணமாக, பூமியிலிருந்து பார்க்கும்போது அதன் வளையங்கள் மறைய உள்ளன. அதாவது, உண்மையில் அதன் வளையங்கள் மறையவில்லை; இங்கிருந்து பார்க்கும்போது நம் கண்களுக்கு தெரியாத வண்ணம் ஒளிகின்றது.

சனிக்கோளின் வளையங்கள் மறையும் நிகழ்வு வரும் 2025 ஆம் ஆண்டு நிகழ்கிறது. ஒவ்வொரு 13 முதல் 15 ஆண்டுகளுக்கும் இத்தகைய நிகழ்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மார்ச் 2025 க்கு பிறகு மீண்டும் தோன்றும் வளையம், நவம்பர் 2025 இல் மறைந்துவிடும். அதன் பிறகு, 2032 ஆம் ஆண்டில் முழுமையாக காணப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu