சவுதி அரேபியா - தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்கு பிறகு மறுமலர்ச்சி

November 26, 2022

கடந்த 1989 ஆம் ஆண்டு சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையிலான உறவு முறிந்தது. தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர், சவுதி இளவரசரிடம் துப்புரவு பணியாளராக இருந்த தாய்லாந்தை சேர்ந்த ஒருவர், திட்டமிட்டு தங்கம் மற்றும் வைர நகைகளை அரண்மனையிலிருந்து திருடிச் சென்றுள்ளார். திருடப்பட்ட நகைகளின் இன்றைய மதிப்பு 164 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சவுதி அரேபியா அரசர் சார்பில் தாய்லாந்து அரசுக்கு […]

கடந்த 1989 ஆம் ஆண்டு சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையிலான உறவு முறிந்தது. தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்னர், சவுதி இளவரசரிடம் துப்புரவு பணியாளராக இருந்த தாய்லாந்தை சேர்ந்த ஒருவர், திட்டமிட்டு தங்கம் மற்றும் வைர நகைகளை அரண்மனையிலிருந்து திருடிச் சென்றுள்ளார். திருடப்பட்ட நகைகளின் இன்றைய மதிப்பு 164 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சவுதி அரேபியா அரசர் சார்பில் தாய்லாந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய்லாந்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனால், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை போலி எனவும், 50 காரட் வைரம் தொலைந்ததும் தெரிய வந்தது. மேலும், இதில் தாய்லாந்து அரசும் உடந்தை என்று தெரிய வந்ததால், இரு நாட்டு உறவுகளும் முறிந்தது. சர்வதேச அரங்கில் ‘ப்ளூ டைமண்ட் கேஸ்’ என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வருட தொடக்கத்தில் தாய்லாந்து பிரதமர் சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றார். அதைத் தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி சவுதி அரேபிய இளவரசர் தாய்லாந்து சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதனால், உறவுகளில் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu