ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), எஸ் வங்கியில் உள்ள தனது 24% பங்குகளை, அதாவது ரூ.184.2 பில்லியன் (2.2 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பங்குகளை, 2025 மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஜப்பானிய வங்கியான சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப் மற்றும் துபாயை தலைமையிடமாக கொண்ட எமிரேட்ஸ் என்பிடி ஆகியவை, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (RBI) வாய்மொழி ஒப்புதலுடன் யெஸ் வங்கியின் 51% பெரும்பான்மை பங்கை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு எஸ் வங்கியை மீட்டெடுத்த எஸ்பிஐ, இந்த விற்பனையிலிருந்து ரூ.100 பில்லியன் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சந்தை நிலைத்தன்மை இல்லாமை மற்றும் இதே காலகட்டத்தில் நடக்கவுள்ள IDBI பங்கு விற்பனை காரணமாக இந்த ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.