பாரத ஸ்டேட் வங்கி லாபம் 24% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கணிப்புகளை மீறி உயர்வான லாபம் மற்றும் வருவாயை பாரத ஸ்டேட் வங்கி பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் 24% உயர்ந்து 20698 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 19% உயர்ந்து 111043 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கியின் வாரா கடன் […]

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கணிப்புகளை மீறி உயர்வான லாபம் மற்றும் வருவாயை பாரத ஸ்டேட் வங்கி பதிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் 24% உயர்ந்து 20698 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 19% உயர்ந்து 111043 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கியின் வாரா கடன் அளவு 7% சரிந்து 84276 கோடி ஆக உள்ளது. பாரதி ஸ்டேட் வங்கியின் என்பிஏ 2% சரிந்து 21051 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 61077 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு பங்குக்கு 13.7 ரூபாய் டிவிடெண்ட் வழங்க நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி டிவிடெண்ட் கட்டண தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu